| 22 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
இவ்வாராய்ச்சி பத்துப்பாட்டின் ஒவ்வொரு தனித்தனிப் பாட்டைப் பற்றியும் ஆராய்ந்து தனித்தனியாக எழுதப்பட்டதே இவ்வாராய்ச்சி, இலக்கியக் கண்ணோட்டத்துடன் பழந்தமிழ்ப் பாட்டின் சொற்சுவை பொருட்சுவைகளைப் பாராட்டிப் பேசும்முறையில் எழுதப்படவில்லை, வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் வரையப்பட்டது, பழைய தமிழகத்தில் நிலவியிருந்த நாகரிகம் யாது? அக்காலத்தில் அரசு, வாணிகம், வளம் இவைகள் எப்படியிருந்தன? பழந்தமிழ் மக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் யாவை? இவைகளைத் தெரிந்துகொள்ளும் எண்ணத்துடன் எழுதப்பட்டது, இத்தகைய ஆராய்ச்சி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ் நாட்டைப்பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு ஓரளவாவது துணை செய்யக்கூடும் என்பது உறுதி. |