பக்கம் எண் :

24பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

முருகனை வணங்கி அவன் அருள்பெற்று வந்தான் ஒருபுலவன், அவன் வரும் வழியிலே முருகன் அருளைத் தேடிச்செல்லும் மற்றொருவனைக் கண்டான்,அவனுக்கு முருகன் இருக்கும் இடங்கள்-அவ்விடங்களுக்குச் செல்லும் வழிகள் இவைகளை எடுத்துக் கூறினான்,அவனை முருகனிடம் வழிப்படுத்தினான்,இவ்வாறு ஒருவனை முருகனிடம் ஆற்றுப்படுத்துவதே இத்திருமுருகாற்றுப்படை.

ஆசிரியர்

இதன் ஆசிரியர் நக்கீரர், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பது இவருடைய முழுப்பெயர், பத்துப்பாட்டுள் இவர் பாடியவை இரண்டு பாடல்கள்; ஒன்று திருமுருகாற்றுப்படை; மற்றொன்று நெடுநல்வாடை.

நக்கீரரைப்பற்றி வழங்கும் வரலாறுகள் பல; கடைச்சங்கப் புலவர்களிலே இவர் தலைசிறந்தவர்; கவிஞர்களின் தலைவராகப் புகழ்பெற்றிருந்தார், "நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே" என்று கூறிச் சிவபெருமானை எதிர்த்து வழக்காடினார்"் இவ்வாறு ஒரு வரலாறு இவரைப்பற்றி வழங்குகின்றது.

"தமிழ்மகன் உண்மையை உரைக்க ஒருபொழுதும் பின்வாங்கமாட்டான்; உண்மையை உரைப்பதன் மூலம் எத்தகைய இன்னல் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் துணிந்து நிற்பான்". இவ்வுண்மையை விளக்கவே இவ்வரலாறு வழங்கப்படுகின்றது.

நக்கீரர் மதுரையிலே வாழ்ந்தவர்; தமிழ்நாட்டு அந்தணர்; "சங்கறுப்பதெங்கள் குலம்" என்று இவர் பாடியதாக வழங்கும் ஒரு பாடலால் இவர் சங்கறுக்கும் பார்ப்பார் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கொள்ளலாம்,சங்கறுக்கும் தொழில் செய்யும் பார்ப்பாரை வேள்வி செய்யாத பார்ப்பார்