பக்கம் எண் :

திருமுருகாற்றுப்படை25

என்று கூறுவர்,"வேளாப் பார்ப்பான்" என்று கூறும் அகநானூற்றால் இதனை அறியலாம்.

நக்கீரர் தந்தையார் மதுரையிலே ஆசிரியத் தொழில் செய்து வந்தார், அவர் சிறந்த ஆசிரியர்; நூலாராய்ச்சியிலே திறமையுள்ளவர்; ஆதலால் கணக்காயர் என்ற காரணப்பெயரே அவருடைய இயற்பெயராக வழங்கிவிட்டது, கணக்கு-நூல், ஆயர்-ஆராய்கின்றவர், கணக்காயர்-உபாத்தியாயர்.

நக்கீரருடைய பாடல்கள் சங்கநூல்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன, அகநானூற்றிலே பதினேழு; குறுந்தொகையிலே எட்டு; நற்றிணையிலே ஏழு; புறநானூற்றிலே மூன்று; பத்துப்பாட்டிலே இரண்டு இவர் பாடியன.

இறையனார் அகப்பொருளுக்கு உண்மையுரை கண்டவர் இவர் என்று சொல்லப்படுகிறார்.

பதினோராந்திருமுறையிலே நக்கீரனாரின் பெயரால் பத்துப் பிரபந்தங்கள் காணப்படுகின்றன, திருப்புகழ், கல்லாடம், திருவிளையாடற் புராணங்கள், திருப்பரங்கிரிப் புராணம், சீகாளத்திப் புராணம், ஆகியவைகளிலே இவருடைய வரலாற்றுக் குறிப்பைக் காணலாம், திருப்பரங்குன்றத்திலே நக்கீரரின் உருவச்சிலை ஒன்றுண்டு,மதுரையில் மேலமாசி வீதியில் நக்கீரருக்கு ஒரு கோயில் உண்டு.

நக்கீரர் நல்ல தெய்வபக்தியுள்ளவர்; பொது மக்களால் போற்றப்பட்ட ஒரு பெரும் புலவர். ஆதலால் இவரைப்பற்றி எத்துணையோ கதைகள் வழங்குகின்றன; இவருடைய பாடல்களிலே ஈடுபட்டவர்கள் இவரைத் தெய்வமாக எண்ணி ஏற்றிக் கொண்டாடுகின்றனர்.

சங்கநூல்களிலே உள்ள பாடல்களைப் பாடிய நக்கீரர் வேறு. பதினோராந்திருமுறையிலே உள்ள பிரபந்தங்களைப்