பக்கம் எண் :

28பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

குன்றுதோறாடல் என்பது இயற்கைவளமும் எழிலும் நிறைந்த மலைகள். முருகன் குறிஞ்சிநிலத் தெய்வம். குறிஞ்சிநிலம் மலையும் மலைசார்ந்த நிலமும். ஆகையால் மலைகளெல்லாம் முருகனுக்குரிய இடம்.

பழமுதிர்சோலை அழகர்மலை யென்பர்.

சேண்நின்று
இழும் என இழிதரும் அருவிப்
பழமுதிர்சோலை மலைகிழவோனே... .

வானத்திலிருந்து இழும் என்ற ஓசையுடன் வீழ்கின்ற அருவியையுடைய பழங்கள் முற்றியிருக்கின்ற சோலைகள் நிறைந்த மலையின் தலைவனே" என்பது திருமுருகாற்றுப்படையின் இறுதியடிகள்; பழமுதிர்சோலை மலையைக் குறிக்கும் வரிகள்.

இதில் குறிப்பிட்டிருக்கும் அருவி அழகர்மலையில் உள்ள சிலம்பாற்றைக் குறிப்பிடுவது. ஆகையால் பழமுதிர்சோலை மலையென்பது அழகர்மலைதான் என்று கூறுகின்றனர்.

பழமுதிர்சோலை மலையென்பது அழகர் மலைதானா என்பது ஆராய்ந்து முடிவு செய்யப்படவேண்டிய செய்தி. பரங்குன்றம் முருகன் திருப்பதியாக இருந்த காலத்திலேயே அழகர்மலை திருமாலிருஞ்சோலை என்ற பெயருடன் சிறந்த திருமால் திருப்பதியாக விளங்கியிருந்தது. இவ்வுண்மையைப் பரிபாடலால் காணலாம்.

பரிபாடல் சங்கநூல்களாகிய எட்டுத்தொகை நூல்களிலே ஒன்று. அந்நூலில் திருமால், செவ்வேள் ஆகியவர்களைப்பற்றிய பாடல்களும், வைகையைப் பற்றிய பாடல்களும் காணப்படுகின்றன. இவற்றுள் செவ்வேளைப் பற்றிய பாடல்கள் திருப்பரங்குன்றத்தையும் அங்குள்ள முருகனைப்