| 30 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |  
 
 தெய்வங்கள் திருமால், பரமசிவன், இந்திரன், பிரம்மன் முதலிய தெய்வங்களை இந்நூலிலே காணலாம்.  "பாம்பு இறக்கும்படி கொல்லுகின்ற புள்; பலகோடுகளையுடைய சிறகுள்ள புள்; இத்தகைய கருடப்புள்ளைக் கொடியாக உயர்த்தவர் திருமால்.  பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள் அணி நீள்கொடிச் செல்வன்" என்பது திருமாலைக் குறித்துவரும் அடிகள்.        (150--151) "வெண்மையான காளைஉரு எழுதிய கொடியை வலப்பக்கத்தில் உயர்த்தியவன்; பலரும் புகழும் வலிமையான தோளை உடையவன்; இடப்பாகத்தில் உமையை வைத்துக்கொண்டிருப்பவன்; இமையாத மூன்று கண்களை உடையவன்; திரிபுரத்தை அழித்த வலிமை உடையவன்.  வெள்ளேறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையாமுக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்'  இது சிவபெருமானைக் குறிக்கும் அடிகள்.              (151--154) "ஆயிரங்கண்களை உடையவன்; நூறு என்னும் பல வேள்விகளைச் செய்தவன்; பகைவர்களைக் கொன்றழித்து வெற்றிபெறக்கூடியது-நான்கு தந்தங்களை உடையது-அழகிய நடையை உடையது-தொங்குகின்ற பெரிய கையை உடையது-ஆகிய யானையின் பிடரியிலே உயர்த்தியிருக்கின்ற அம்பாரியில் ஏறிச்செல்லும் செல்வத்திலே சிறந்தவன்.   |