34 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம், ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத்தன்றே, ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே, ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுறநாடித் திங்கள் போலத் திசை விளக்கும்மே, ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவு கொள்நெஞ்சமொடு களம்வேட்டன்றே, ஒருமுகம், குறவர்மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே" முருகனுடைய ஆறுமுகங்களும் செய்யும் செயல்கள் இவை. (92--102) "வானத்தில் திரியும் முனிவர்களைத் தாங்குகின்றது ஒருகை; இடையிலே ஊன்றியிருக்கின்றது ஒரு கை; அழகிய ஆடையையணிந்த துடையின் மேல் கிடக்கின்றது ஒரு கை; அங்குசத்தை ஏந்திக்கொண்டிருக்கின்றது ஒரு கை; ஒரு கை கேடகத்தை ஏந்தியிருக்கின்றது; ஒரு கை வேலைச் சுழற்றிக் கொண்டிருக்கின்றது; ஒரு கை மார்புக்கு நேரே ஞானக் குறிப்புடன் விளங்குகின்றது; ஒரு கை மார்பில் அணிந்த மாலையோடு சேர்ந்து கிடக்கின்றது; ஒரு கை கொடியுடன் மேலே சுழலும்; ஒருகை மணிகளை ஆட்டி ஒலிக்கச் செய்கின்றது; ஒருகை மேகத்தைப் பிடித்து மழையைப் பெய்விக்கின்றது; ஒரு கை தேவ மகளிர்க்கு மணமாலை சூட்டி மகிழ்ச்சி அடைகின்றது. விண்செலன் மரபின் ஐயர்க்கேந்தியது ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை; அங்குசம் கடாவ ஒருகை; இருகை |