ஐயிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒருகை; மார்பொடு விளங்க, ஒருகை தாரொடு பொலிய, ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப; ஒருகை பாடுஇன்படுமணி இரட்ட; ஒருகை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைசூட்ட". முருகனுடைய பன்னிரு கரங்களும் செய்யும் செயல்களை இவ்வடிகள் குறித்தன. (107-117) இவைகளால் முருகன் ஆறுமுகங்களும் பன்னிரண்டு கைகளும் உடைய அழகிய உருவமாகச் செய்து வணங்கப்பட்டான் என்பதைக் காணலாம். வழிபாட்டுமுறை பண்டைத் தமிழர்களிடம் தெய்வங்களுக்கு உயிர்களைப் பலியிட்டு வணங்கும் வழக்கம் இருந்நது. அவர்கள் மலர்களிட்டும் தெய்வங்களை வணங்கினர்; இரத்தங் கலந்த அரிசியைப் பலியாக வைத்தும் வணங்கினர். "சிறிய திணை அரிசியை மலரோடு கலந்து வைத்தும், ஆடறுத்தும், கோழிக் கொடியோடு முருகனை வரிசையாக நிறுத்தியும், ஊர்கள்தோறும் முருகனுக்குச் சிறந்த விழாக்கள் செய்வர். சிறுதினை மலரொடு விரைஇ, மறி அறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ, ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்" 218-220 "மிகுந்த வலிமை பொருந்திய பெரிய கால்களை உடைய கொழுத்த ஆட்டுக் கடாவை வெட்டுவார்கள். அதன் குருதியுடன் தூய வெள்ளையான அரிசியைக் கலந்து பலிகளாகப் |