36 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
பண்ணுவார்கள். அவைகளைப் பிரப்பங் கூடைகளிலே வைத்து முருகனைப் பூசிப்பார்கள் மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு, விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச்செய்து, பல் பிரப்பு இரீஇ" (232--234) இவைகள் உயிர்ப்பலியிட்டு முருகனை வழிபட்ட செய்தியைக் கூறுகின்றன. முருகனுக்கு ஆடு வெட்டிப் பூசை போடுதல் அக்கால வழக்கம். புராண வரலாறுகள் சங்க காலத்திலே தமிழகத்திலே புராண வரலாறுகள் பல வழங்கி வந்தன. மாபுராணம், பூதபுராணம் என்பவை இடைச்சங்க காலத்தில் இருந்த நூல்கள். ஆகவே கடைச்சங்க காலத்தில் புராண வரலாறுகள் தமிழ்நாட்டில் பெரு வழக்காக இருந்தன என்பதில் ஐயமில்லை. முனிவர்களைப்பற்றியும், கடவுளர்களைப் பற்றியும் மொழிவனவே புராணங்கள். புராணம்-புராதனமான வரலாறு, புராதனம் பழமை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்கள் புராணங்களிலே நம்பிக்கை வைத்திருந்தனர். இதற்குத் திருமுருகாற்றுப்படை சான்றாகும். புராண முருகனைப் பற்றியே இந்நூல் போற்றிப் புகழ்கின்றது. கந்தபுராண வரலாற்றுப் பகுதிகளை இந்நூலிலே காணலாம். பரமசிவன் பார்வதியை மணந்தபோது, தேவர்கள் பரமசிவனிடம் ஒரு வரங்கேட்டனர். பார்வதியுடன் கூடி பிள்ளை பெறக்கூடாது என்பதே அவ்வரம். பரமசிவனும் |