பக்கம் எண் :

40பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

இவைபோன்ற புராணக்கதைக் குறிப்புகளும் காணப்படுகின்றன.

முனிவர்கள்

முனிவர் என்பது தமிழ்ச்சொல். கோபிப்பவர்; வெறுப்பவர் என்பது இதன் பொருள். இவர்கள் தீமைகளை வெறுப்பவர்கள். உலக ஆசைகளை உதறித் தள்ளுகிறவர்கள். மக்கள் நன்மைக்கு மாறானவைகளை வெறுப்பவர்கள். இத்தகைய முனிவர்கள்-உயர்ந்தவர்கள் பலர்-பத்துப்பாட்டுக் காலத்திலே தமிழ்நாட்டிலே வாழ்ந்திருந்தனர். அவர்களுடைய தோற்றத்தையும் தன்மையையும் நக்கீரர் அப்படியே ஓவியம்போல் எழுதிக் காட்டியுள்ளார்.

"மரவுரியை உடையாக உடுத்தியவர்கள், அழகான வலம்புரிச் சங்குபோலத் தூக்கிமுடித்த வெண்மையான நரைத்த முடியை உடையவர்கள்; குற்றமற்றுக் காணப்படும் காட்சியினர். மான்தோலைப் பூண்டவர்கள்; சதையற்ற மார்பிலே அக்கக்காக எலும்புகள் காணப்படும் ஆக்கையினர். பன்னாட்கள் உண்ணாவிரதம் இருப்பவர்கள்; பகைமையும், சினமும், நீங்கிய சிந்தையினர்; அனைத்தும் கற்றவர்களைக் காட்டிலும் சிறந்த அறிஞர்கள்; கற்றவர்களுக்கு எல்லையாகத் தாமே நின்று காட்சியளிப்பவர்கள்; ஆசையையும் கோபத்தையும் அடியோடு விட்டொழித்த அறிஞர்கள்; துன்பத்தை உணராத துறவிகள்; மாசற்ற மதியுடை முனிவர்கள்.

சீரைதைஇய உடுக்கையர்; சீரொடு
வலம்புரிபுரையும் வால்நரை முடியினர்;
மாசு அறஇமைக்கும் உருவினர்; மானின்
உரிவைதைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்தியங்கும் யாக்கையர்; நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர்; இகலொடு