பக்கம் எண் :

  

3. பொருநர் ஆற்றுப்படை

பத்துப்பாட்டுகள் இரண்டாவது பாட்டு பொருநர் ஆற்றுப்படை. 248 வரிகளைக் கொண்ட ஒரே பாட்டு. ஆசிரியப்பாவால் அமைந்தது.

பொருநர் ஆற்றுப்படை என்றால் பொருநரை ஆற்றுப்படுத்துவது என்பது பொருள். ஒரு பொருநன் மற்றொரு பொருநனுக்கு வழி சொல்லி அனுப்பி வைத்தல்.

புகழ்ந்து பாடுவோருக்குப் பொருநர் என்று பெயர். கூத்தருக்கும் பொருநர் என்ற பெயருண்டு. பொருநர்-அதாவது புகழ்ந்து பாடுவோர் மூவகைப் படுவர். அவர்கள் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்பவர்கள். இங்கே குறிக்கப்படும் பொருநர் போர்க்களம் பாடுவோர்.

ஆசிரியர்

இதன் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார். இவர் இந்நூலைத் தவிர வேறு நூல்களோ, பாடல்களோ பாடியதாகத் தெரியவில்லை. இவர் வரலாற்றை அறிவதற்கும் வழியில்லை. இவர் கரிகாற்சோழனைப் பற்றிப் பாராட்டிப் பாடுகிறார்; பொன்னியின் பெருமையைப் பற்றிப் புகழ்ந்திருக்கிறார்; சோழ நாட்டின் இயற்கை வளத்தைப் பற்றி எடுத்துச்