சொல்லியிருக்கிறார். இவைகளால் இவர் சோழ நாட்டில் வாழ்ந்தவர்; கரிகாற்சோழன் ஆதரவு பெற்று வாழ்ந்தவர்; அரும் பெரும் தமிழ்ப் புலவர் என்று மட்டும்தான் இவர் வரலாறு தெரிகின்றது. பாட்டின் தலைவன் இது சோழன் கரிகாலனைப் பற்றிப் புகழ்ந்து பாடிய பாட்டு; கரிகாலனுடைய கொடைத்தன்மை; வீரத்தன்மை; அரசியல் மேன்மை; பெரும்புகழ் இவைகளை இந்நூலிலே காணலாம். ஏழை மக்களின் வாழ்க்கைநிலை; சோழநாட்டு மக்கள் செய்துவந்த தொழில்கள்; சோணாட்டிலே இப்புலவர் காலத்தில் வளர்ந்திருந்த கலைகள்; சோழநாடு சுரந்த இயற்கைச் செல்வங்கள்; வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரியின் பெருமை; இவைகளை இப்பொருநர் ஆற்றுப்படையிலே காணலாம். சோழன் கரிகால்வளவன், கரிகாற் பெருவளத்தான், கரிகாலன் என்பன கரிகாலனைப் பற்றி வழங்கும் பெயர்கள். இவனுடைய தலைநகரம் காவிரிப் பூம்பட்டினம். சோழநாடு இவனுடைய நாடு. தமிழ் இலக்கியங்களிலே இவனைப் பற்றி வழங்கும் வரலாறுகள் பல. இவனுடைய கால் நெருப்பில் பட்டுக் கரிந்து போய்விட்டது. ஆதலால் கரிகாலன் என்று பெயர் பெற்றான் என்பர். சோழமன்னன் சந்ததியற்றுப் போனான். உடனே மக்களும், அமைச்சரும் சேர்ந்து பார்த்திபனைத் தேடிக் கொண்டுவரப் பட்டத்து யானையை அலங்கரித்து அனுப்பினர். அந்த யானை அரசகுமாரனைப் போன்ற ஒரு சிறுவனைத் |