| 50 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
இன்னிசை பாடுவதிலும் வல்லவர்களாயிருந்தனர். இதனால்தான் அவர்களைப் "பாடினி" என்று அழைத்தனர். "பெண்மயிலைப் போன்ற பாடினி சாதிலிங்கத்தை உருக்கி வார்த்தாற்போன்ற செந்நிலத்தே நடந்து சிந்தை கலங்கினாள். சுக்காங்கற்கள் உறுத்தி அவள் கால்களிலே கொப்புளங்கள் தோன்றின; மரல் என்னும் பழத்தைப் போல் உள்ளே நீர் மொக்குளித்த அந்தக் கொப்புளங்கள் அவள் நடையைத் தடுத்தன; பாடுவோரின் பாட்டுக்கேற்ப நடைபோடும் யானைகள் வாழும் அந்தக் காட்டிலே அவள் நடக்க முடியாமல் நின்றுவிட்டாள்; இலையுதிர்ந்த ஒரு மரத்தின் அடியிலே வலை விரித்தது போன்ற நிழலிலே உட்கார்ந்தாள்; காடுறை தெய்வத்தை வணங்கிய பிறகு அவள் பாடத் தொடங்கினாள். " என்று கூறும் பகுதியால், பெண்களும் வள்ளல்களிடம் பரிசு பெறச் சென்ற செய்தியைக் காணலாம். வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி அரக்கு உருக்கன்ன செந்நிலன் ஒதுங்கலின், பரல்பகையுழந்த நோயொடு சிவணி, மரல் பழுத்து அன்ன மறுகுநீர் மொக்குள் நன்பகல் அந்தி நடையிடை விலங்கலின்; பெடைமயில் உருவின் பெருந்தகுபாடினி பாடின பாணிக் கேற்ப நாடொறும் களிறு வழங்கு அதரக்கானத்து அல்கி; இலையில் மராஅத்த எவ்வம் தாங்கி வலை வலந்தன்ன மெல்நிழல் மருங்கில், காடுறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை. (42-52) இவ்வடிகளால் மேலே கூறிய செய்தியைக் காணலாம். இவ்வடிகள், பொருநனுடன் போந்த அவன் மனைவி பாடினியைப்பற்றியவை. |