பக்கம் எண் :

பொருநர் ஆற்றுப்படை55

அவர்கள் கொடுக்கக் கொடுக்க நாங்கள் அதனை வாங்கி வழி நடந்துபோன வருத்தம் தீர உண்டோம். மதுவருந்திய மயக்கத்துடன் நின்றோம்" என்று மதுவின் இன்பத்தைப் பற்றிக் கூறுகிறார்.

இழையணி வனப்பின் இன்னகை மகளிர்,
போக்கு இல்பொலங்கலம் நிறையப், பல்கால்
வாக்குபு தரத்தர, வருத்தம் வீட
ஆர உண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை.                         (85--89)

நகைகளணிந்த அழகுடைய மகளிர் பொற்கிண்ணத்திலே மதுவை ஊற்றிக் கொடுப்பார் என்றதனால் அக்காலத்துச் செல்வர்களின் வாழ்க்கை நிலைமையையும் அறியலாம்.

மாமிசத்தை வேக வைத்தும் தின்றனர்; சுட்டும் தின்றனர். வெந்தது வேவிறைச்சி; சுட்டது சூட்டிறைச்சி. செம்மறியாட்டுக் கறியைச் சிறந்ததாக எண்ணினர்; செம்மறியாட்டுக் கறியிலும் அதன் தொடைக்கறியைச் சிறந்த சத்தும் கொழுப்பும் உடையதாகக் கருதினர். வந்த விருந்தினருக்குச் செம்மறியாட்டுக் கறி சமைத்துப் போடுவார்கள்.

"அருகம் புல்லை மேய்ந்து கொழுத்திருக்கின்ற செம்மறியாட்டின் மாமிசத்தை வேக வைப்பர். அதன் தொடையின் மேற்பாகத்துக் கறியை எடுத்துக் கொடுத்து விழுங்கச் சொல்லி வற்புறுத்துவர்.

இரும்புச் சட்டத்திலே கோத்துத் தீயிலே சுட்டெடுத்த நல்ல கொழுத்த ஊன்; அதன் நல்ல துண்டை வாயிலே போட்டுக் கொள்வோம்; சூடு பொறுக்காமல் அந்தத் துண்டத்தை இந்தக் கடைவாய்க்கும், அந்தக் கடைவாய்க்கும் தள்ளித் தள்ளித் தின்போம்; ஊன் தின்றது போதும் என்று வெறுத்தால் வேறு வேறு வகையாகச் செய்யப்பட்ட பலகாரங்களைக்