பக்கம் எண் :

56பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

கொடுப்பர்; எம்மை அங்கேயே தங்கும்படி செய்வர்" என்று புலால் உணவின் சுவையைப் புகழ்ந்துள்ளனர்.

துராஅய் துற்றிய துருவை அம்புழுக்கின்
பராஅரை வேவைப் பருகு எனத் தண்டி;
காழின் சுட்ட கோழ்ஊன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி;
அவை அவை முனிகுவம் எனினே, சுவைய
வேறுபல் உருவின் விரகுதந்து இரீஇ                (103-108)

இவ்வடிகளின் பொருளே மேலே கூறப்பட்டது. இதனால் மாமிச உணவை எவ்வளவு இன்சுவை உணவாகக் கொண்டிருந்தனர் தமிழர் என்பதைக் காணலாம்.

மாமிச உணவைத் தவிர நல்ல காய்கறிகளைச் சமைக்கவும் அறிந்திருந்தனர்; நல்ல தானியங்களைச் சமைக்கவும் கற்றிருந்தனர்.

"கடினமற்ற அரிசி; முழு அரிசி; இ்த்தகைய அரிசியால் ஆக்கப்பட்ட சோறு; விரல்போல் நிமிர்ந்து தனித்தனியாகச் சேர்ந்திருக்கின்ற சோறு; அதைப் பால் விட்டுச் சமைத்த பொரிக் கறிகளோடும், புளிக்கறிகளோடும் மிகுதியாகத் தின்போம்."

முரவைபோகிய முரியா அரிசி,
விரல்என நிமிர்ந்த நிரல் அமைபுழுக்கல்.
பரல்வறைக் கருனை, காடியின் மிதப்ப
அயின்ற காலை.                           (113--116)

இந்த அடிகளால் பழந்தமிழர் சைவ உணவு சமைத்த முறையைக் காணலாம்.

ஆகவே பண்டைத் தமிழர்கள் மதுஅருந்தினர்; மாமிசம் உண்டனர்; மரக்கறிகளும் சாப்பிட்டனர். இவைகளை