பக்கம் எண் :

58பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

பண்டமாற்று

ஒரு பண்டத்தைக் கொடுத்து, அதற்கு மாறாக மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவதுதான் பண்டைக்கால வாணிக முறை. தமிழ்நாட்டிலும் இந்த முறைதான் இருந்து வந்தது. இதனாலேயே வாணிகத்துக்குப் பண்டமாற்று என்ற பெயர் வைத்தனர். இம்முறையைப் பொருநர் ஆற்றுப்படை ஆசிரியர் அழகாகக் கூறியுள்ளார்.

தேனையும், நெய்யையும், கிழங்கையும் கொடுத்தவர்கள் அவைகளுக்கு மாறாக மீன், நெய், மது இவைகளை வாங்கிக் கொண்டு போகின்றனர்.

தேன் நெய்யொடு கிழங்குமாறியோர்.
மீன் நெய்யொடு, நறவு மறுகவும்          (214--215)

இனிய கரும்பு, அவல் ஆகியவைகளைக் கொடுத்தவர்கள் அவைகளுக்கு மாறாக மான் இறைச்சியையும் கள்ளையும் வாங்கிக்கொண்டு போகின்றனர்.

தீம்கரும்போடு அவல்வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவும்"                (216--217)

இவைகளால் பண்டமாற்று என்றால் இன்னதென்று அறிந்து கொள்ளலாம்.

கரிகாலன் பெருமை

கரிகாற்சோழன் உலகத்தை ஒரு குடையின் கீழ் வைத்து ஆண்டவன்; குடி மக்களின்பால் குறையாத அன்பு கொண்டவன்; அறங்கூறும் நூல்களை அறிந்து அம்முறையைப் பின்பற்றி ஆட்சிபுரிந்தவன்; பகைவர்களை வெல்லும் வேல்படையை உடைய சிறந்த வீரன்". இவ்வாறு அவனுடைய