பக்கம் எண் :

6பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

புலவர்கள் பாடினர். கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் முதலியவை அவர்கள் பாடியவை. இலக்கணம், அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகியவை. இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன்வரை 59 பாண்டியர்கள். இது இருந்த இடம் கபாடபுரம்; இதுவும் கடல்கொண்ட பாண்டிய நாட்டில் இருந்தது.

கடைச் சங்கத்திலே சிறு மேதாவியார் முதலிய 49 புலவர்கள் இருந்தனர். கவிபாடியவர் 449 பேர். நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புற நானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியவை இவர்களால் பாடப்பட்டவை. இச்சங்கத்தார்க்கு இலக்கணம் அகத்தியமும், தொல்காப்பியமும். இச்சங்கம், 1850 ஆண்டுகள் நடைபெற்றது. முடத்திருமாறன் முதல் 49 பாண்டியர்கள் இச்சங்கத்தின் ஆதரவாளர்கள். இச்சங்கம் இருந்தது இன்றுள்ள மதுரை மாநகரம்.

இதுவே இறையனார் அகப்பொருள் உரையிலே காணப்படும் முச்சங்க வரலாற்றுச் சுருக்கம். இதைக் கட்டுக்கதை என்போரும் உண்டு; முச்சங்கங்கள் இருந்ததில்லை என்போரும் உண்டு. இது கட்டுக்கதையோ வரலாறோ எப்படியாவது இருக்கட்டும். முச்சங்கங்கள் பற்றிய கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கி வருகின்றது.

சங்ககால நூல்கள் எல்லாவற்றையும், முச்சங்க வரலாறு குறிப்பிடவில்லை. சில நூல்களின் பெயரைச் சொல்லி இத்தொடக்கத்தன" என்றே கூறப்பட்டிருக்கின்றது. முச்சங்க வரலாற்றில் சொல்லப்படாத பல நூல்களும் சங்க காலத்தில் வழங்கின என்று தெரிகின்றது. பத்துப்பாட்டின்