பக்கம் எண் :

60பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

கரிகாலன் யானையால் கொண்டு வரப்பட்டுப் பட்டம் சூட்டப்பட்டவன் என்ற கதை இந்நூலால் மறுக்கப்படுகிறது. பொருநர் ஆற்றுப்படையிலே குறிக்கப்படும் கரிகாலன் அந்தக் கதைக்குரியவன் அல்லன். இவன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன்; தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதே அரசனாகும் உரிமையுடன் பிறந்தவன். முருகனைப் போன்ற ஆற்றலும் அழகும் உடையவன் என்று கூறுகிறது. இதனை

உருவபஃறேர் இளையோன் சிறுவன்,
முருகன் சீற்றத்து உருகெழு குரிசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி              (130--132)

என்ற அடிகளால் அறியலாம்.

இக்கரிகாற்சோழன், வெண்ணி என்ற இடத்திலே சேரனையும், பாண்டியனையும் போரிலே தோற்கடித்தான்; வெற்றி மாலை சூட்டினான்; இச்செய்தியையும் இவனுடைய வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளம்புகிறது இந்நூல்.

காவிரியின் சிறப்பு

சோழ நாட்டிற்குக் காவிரிநாடு, பொன்னி நாடு என்ற பெயர்கள் உண்டு. காவிரி நதி பாய்வதால் காவிரி நாடு. காவிரிக்குப் பொன்னி என்று மற்றொரு பெயர். ஆதலால் பொன்னி நதி பாய்வதால் பொன்னிநாடு. காவிரியாற்றுப் பாய்ச்சல்தான் "சோணாடு சோறுடைத்து" என்று சொல்லும்படி செய்வது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சோழநாட்டில் ஒருவேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளைந்ததாகக் கூறுகிறது இந்நூல். ஒரு வேலி என்பது ஆறு ஏக்கரும் மூன்றில் இரண்டு பாக ஏக்கரும் கொண்டது. ஒரு கலம்