என்பது 24படி கொண்டது. இவ்வாறு வேலி ஆயிரம் விளைந்ததற்குக் காரணம் காவிரியாறுதான் என்று கூறுகிறார் இந்நூலாசிரியர். "செந்நெல்லைக் கொண்டிருக்கின்ற நிலம்; வேலி ஒன்றுக்கு ஆயிரம் கலம் விளையும்படியுள்ள நிலம்; காவிரியால் காப்பாற்றப்படும் சோழநாட்டில் உள்ள நிலம். சாலி நெல்லின் சிறைகொள், வேலி ஆயிரம் விளையுட்டாகக், காவிரி புரக்கும் நாடு" (246--248) என்பதனால் இவ்வுண்மையைக் காணலாம். வேலிக்கு ஆயிரம் கலம் விளைந்ததென்பது புனைந்துரையன்று; உண்மையுரையாகும். ஒரு ஏக்கருக்கு 150 கலம் விளைந்ததாகக் கூறுகிறது. இன்றும் சோழ நாட்டில் ஏக்கர் ஒன்றுக்கு 150 கலம் விளையக்கூடிய பகுதிகள் இருக்கின்றன. இதற்குக் குறைந்து விளையும் பகுதிகளிலும் நிலத்தைப் பண்படுத்தினால் இந்த அளவு விளைவிக்க முடியும். இன்னும் பல செய்திகள் பண்டைத் தமிழர் நாகரிகம் பலவற்றை இந்தப் பொருநர் ஆற்றுப்படையிலே பார்க்கலாம். "பண்டைத் தமிழ்ர்கள் பொன்னால் அழகிய நகைகள் செய்து அணிந்தனர். செல்வர்கள் வீட்டிலே பொன்னால் செய்த பாத்திரங்கள் இருந்தன. இசை பாடுவோர் முதலில் தெய்வத்தை வாழ்த்திய பிறகுதான் பாடத் தொடங்குவார்கள். |