பக்கம் எண் :

62பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

மறு பிறப்பிலே நம்பிக்கையுண்டு; இம்மையிலே செய்த தவம் மறுமையிலே பயன்தரும் என்று நம்பினர்.

விருந்தினர் விடைபெற்றுச் செல்லும்போது அவருடன் ஏழடி நடந்து சென்று அன்புரை புகன்று அனுப்பிவைப்பர்.

உழவுத் தொழில் மிகச் சிறந்த முறையிலே நடைபெற்று வந்தது.

இவை போன்ற இன்னும் பல செய்திகளும் பொருநர் ஆற்றுப்படையிலே காணப்படுகின்றன. சிறப்பாகக் கரிகாற்சோழனுடைய பெருமையையும், அவன் ஆண்ட சோழ நாட்டின் சிறப்பையும் எடுத்துக்காட்டுவதே இந்நூலின் நோக்கம். பழந்தமிழ்க் கவியின் பண்பறிந்தோர்க்கு இந்நூலின் சொற்சுவையும் பொருட்சுவையும் இன்பம் சுரக்கும்.