பக்கம் எண் :

  

4. சிறுபாணாற்றுப்படை

இது பத்துப்பாட்டுள் மூன்றாவது பாட்டு; 269 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் ஆகியது.

பாணரை ஆற்றுப்படுத்துவது பாண் ஆற்றுப்படை; பாணருக்கு வழிகூறி அவ்வழியிலே போகவிடுவது என்பதே இதன் பொருள். பாண்-யாழ். பாண் வாசிப்பவர் பாணர். பாண் வாசிக்கும் பெண் பாணினி. பாண்-இசை, பண்ணைப் பாடுவோர் பாணர் என்றும் கூறுவர்.

பழந்தமிழ் நாட்டிலே பாணர் என்று ஒரு வகுப்பினர் இருந்தனர். பாண் வாசிக்கும் தொழில் காரணமாக இவர்களைப் பாணர் என்றழைத்தனர். பொருநர், பாணர், கூத்தர் என்பவர்கள் ஒரே வகுப்பினராக இருந்திருக்க வேண்டும். இவ்வகுப்பினரைச் சேர்ந்த பெண்களுக்குப் பாடினி, பாணினி, விறலி என்ற பெயர்கள் உண்டு.

பாணருள் மூவகையினர் உண்டு. அவர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என்பவர்கள். சங்கீதம் பாடுவோர் இசைப்பாணர். யாழ் வாசிப்போர் யாழ்ப்பாணர். பிச்சை ஏற்றுப் பிழைப்போர் மண்டைப்பாணர்.

பாணர், பொருநர், கூத்தர் முதலியவர்கள் தமக்குப் பரிசளிப்போரைப் புகழ்ந்து பாடுவார்கள்; சங்கீதம்,