பக்கம் எண் :

68பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

விளையா இளங்கள் நாற மெல்குபு பெயராக்
குளவிப்பள்ளிப் பாயல் கொள்ளும்;                (41-46)

என்ற அடிகள் இவ்வுண்மையைக் காட்டுகின்றன.

இந்தச் சேர நாட்டைப் பற்றிச் சொல்லும்போது சேரன் செங்குட்டுவன் என்ற வீரனைப் பற்றியும் விளம்பியிருக்கின்றார்.

"வடதிசையிலே உள்ள இமயமலையிலே வளைவான தனது வில் முத்திரையைப் பொறித்தவன்; உலக்கை போன்ற திரண்ட வலிமையான தோள்களை உடையவன்; தேர்ப்படைகளையுடைய செங்குட்டுவன்" என்று சொல்லுகிறார்.

வடபுல இமயத்து வாங்குவில்பொறித்த
எழு உறழ் திணிதோள் இயல் தேர்க்குட்டுவன்       (48-49)

என்ற அடிகளால் இதனைக் காணலாம்.

சிலப்பதிகாரச் செங்குட்டுவனும் இவனும் ஒன்று என்று கூறுவதற்கான சான்று இதில் இல்லை. சிலப்பதிகாரச் செங்குட்டுவன் கண்ணகியின் உருவச் சிலைக்கான கல் கொண்டுவரவே வடநாடு நோக்கிச் சென்றான்; தன்னை இகழ்ந்த வடவர்களுடன் போர் புரிந்தான்; இவ்வாறு சிலப்பதிகாரம் சொல்லுகிறது. இப்பாட்டில் சேரன் செங்குட்டுவனைப் பற்றிக் கூறும் இடத்திலும், மதுரைக் காஞ்சியில் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிப் பேசுமிடத்திலும் சிலப்பதிகார மணம் சிறிதும் வீசவேயில்லை.

இது குறிப்பிடத்தக்கது.

பாண்டிய நாட்டின் பெருமை

இதற்கு அடுத்தாற்போல் பாண்டிய நாட்டின் பெருமையைப் பற்றிப் பாடுகிறார். அக்காலத்திலே கொற்கை நகரம் பாண்டிய நாட்டின் துறைமுகப்பட்டினம். மதுரை