பக்கம் எண் :

சிறுபாணாற்றுப்படை 69

நகரம் பாண்டிய நாட்டின் தலைநகரம். இவ்விரண்டு நகரங்களின் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறார் இவ்வாசிரியர்.

கொற்கையின் செல்வம் முத்தும் உப்புமாகும். பாண்டிய நாட்டின் பழஞ்செல்வம் முத்து என்பதைப் பல இலக்கியங்களிலும் காணலாம்; பாண்டிய நாட்டின் முத்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகியிருக்கின்றது.

கொற்கையிலே உப்பு வாணிகர்கள், வண்டியிலே உப்பை ஏற்றிக்கொண்டு வியாபாரத்துக்குப் புறப்படுகின்றனர். அவர்கள் தங்கள் மனைவி மக்களுடன் செல்கின்றனர். வெளியூருக்கு வியாபாரத்திற்குப் போகும் போது குடும்பத்துடன் புறப்படுவது அக்கால வழக்கம்.

"வலிமையான எருமைக் கடாவைப் பூட்டிய வண்டியிலே உப்பை ஏற்றிக் கொண்டு போகின்றனர் உப்பு வாணிகர். அவர்கள் வண்டியின் சக்கரச் சுவட்டின் வழியே குழந்தைகளைப் போன்ற குரங்குகளும் தொடர்ந்து வந்தன. அந்த உப்பு வாணிகரின் பெண்கள் தங்கள் பற்களைப் போல் ஒளி வீசும் முத்துக்களை, கிளிஞ்சல்கள் முத்துக்களை மூடியிருப்பது போல், தங்கள் மடிகளிலே மறைத்து வைத்திருக்கின்றனர். அவர்கள் தங்கும் இடங்களிலே நீண்ட கூந்தலையும், சிறிய இடையையும் உடைய பெண்களின் புதல்வர்களுடன் அந்தக் குரங்குகள் கிலு கிலு என்னும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றன."

இவ்வாறு கூறுவதன் மூலம் கொற்கையின் செல்வம் முத்தும் உப்பும் என்பதைக் காட்டுகிறார்.

நோன் பகட்டு உமணர் ஒழுகை யொடு வந்த
மகாஅர் அன்னமந்தி, மடவோர்
நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்,