| 72 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
கடையெழு வள்ளல்கள் இதன் பிறகு கடையெழு வள்ளல்களின் வரலாற்றுக் குறிப்பை நத்தத்தனார் எடுத்துக் கூறியிருக்கும் இயல்பு பாராட்டத் தக்கது. ஒவ்வொரு வள்ளலும் செய்த தன்னலம் கருதாச் செயலைச் சுட்டிக் காட்டி அவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். இதனை 84-வது அடி முதல் 111-வது அடி வரையில் உள்ள 28 வரிகளிலே காணலாம். கடையெழு வள்ளல்களின் வரலாற்றைக் காண்பதற்கு நல்லூர் நத்தத்தனார் கொடுத்திருக்கும் குறிப்பே பெரிதும் துணை செய்வதாகும். அக்குறிப்புக்கள் கீழே வருவன:- வள்ளல் பேகன் மழை வளமுடைய மலையின் பக்கத்திலே கானமயிலொன்று கலாபத்தை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் குளிர் தாங்காமல் நடுங்குகின்றது என்று எண்ணினான். உடனே தனது போர்வையை அதன் மீது போர்த்தினான். இவன் நல்ல வலிமை வாய்ந்தவன். ஆவியர் குடியிலே பிறந்தவன். பேகன் என்னும் பெயருடையவன். வானம் வாய்த்த வளமலைக் கவாஅன், கானமஞ்சைக்குக், கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன், பெருங்கல் நாடன் பேகனும்; (84-87) வள்ளல் பாரி வண்டுகள் உண்ணும்படி நல்ல மலர்களின் மூலம் தேனைச் சிந்திக்கொண்டிருக்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடுவழியிலே-சிறிய மலர்களையுடைய முல்லைக்கொடியொன்று பற்றிப்படரக் கொழு கொம்பின்றித் தவித்துக்கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன், தான் ஏறிவந்த |