பெரிய தேரினை அம் முல்லைக்கொடி-படரும் அதன் அருகிலே நிறுத்தி வைத்தான். இவன் விளங்குகின்ற வெண்மையான அருவிகளையுடைய பறம்பு மலையின் தலைவன்: பாரியென்னும் பெயருடையவன். சுரும்புண நறுவீ உறைக்கும் நாகம் நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப், பெருந்தேர் நல்கிய, பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல், பறம்பின் கோமான், பாரியும்; (87--91) வள்ளல் காரி உலகம் வியக்கும்படி-ஒலிக்கின்ற மணிகளையும், வெண்மையான பிடரி மயிரினையும் உடைய குதிரைகளையும், ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்களுக்கு இல்லையென்னாமல் ஈந்தவன். நெருப்பைப் போல் சுடர்விடுகின்ற-பகைவர்களுக்குப் பயங்கரமாகக் காணப்படுகின்ற-நீண்ட வேற்படையை உடையவன்; வீரக்கழலையும், தோள் வளையத்தையும் அணிந்தவன்; நீண்ட கையை உடையவன் காரி என்பவன். கறங்குமணி வால் உளைப் புரவியொடுவையகம் மருள. ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த, அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல். கழல், தொடித் தடக்கைக் காரியும். (91--95) வள்ளல் ஆய் ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று-தனக்குக் கொடுத்த ஓர் அரிய ஆடையைக் கல்லாலின் |