பக்கம் எண் :

74பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

கீழமர்ந்த சிவபெருமானுக்கு அளித்தான்; பக்தியுடன் கொடுத்தான். இவன் வில்லைச் சுமந்தவன்; வலிமையான தோள்களை உடையவன். அத்தோள்களிலே சந்தனத்தை அணிந்திருப்பவன். இரவலர்கள்பால் எப்பொழுதும் அன்புடன் நன்மொழிகளையே நவில்பவன். ஆய் என்னும் பெயருடையவன்.

நிழல் திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்.
ஆலமர் செல்வர்க்கு அமர்ந்தனன் கொடுத்த.
சாவந்தாங்கிய, சாந்துபுலர் திணிதோள்,
ஆர்வ நன்மொழி ஆயும்;           (95--99)

அதிகமான்

பூமணம் கமழ்கின்ற பெரிய மலைச்சாரலிலே-பொருந்தியிருந்த நெல்லி மரத்திலே கிடைத்தது; அமுதத்தைப் போலே சாவாமையைத் தரும் இனிய நெல்லிக்கனி; அதனைத் தான் உண்ணாமல் தமிழ் மூதாட்டியாகிய ஒளவைக்கு அளித்தான்; இவன் பகைவர்களிடம் வலிமையைக் காட்டுவான்; சினத்தைச் செலுத்துவான்; ஒளி விடுகின்ற நீண்ட வேற்படையை உடையவன்; ஓசையிடும் கடல் போன்ற பெரிய சேனையை வைத்திருப்பவன்; அதிகமான் என்னும் பெயருடையவன்.

மால் வரைக்
கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி,
அமிழ்துவிளைதீம்கனி, ஒளவைக்கு ஈத்த,
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்,
அரவக்கடல்தானை, அதிகனும்;       (99--103)

வள்ளல் நள்ளி

தன்னிடம் உள்ள பொருளை ஒளிக்க மாட்டான்; தன்பால் அன்பு காட்டுவோர் அனைவரும் மகிழும்படி செய்வான்;