| 76 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
இதனை ஒவ்வொருவரைப் பற்றியும் நந்நான்கு வரிகளால் பாடியிருப்பதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். இந்த ஏழு வள்ளல்களின் ஈகைத் தன்மையை இவர்களுக்குப் பின் நல்லியக்கோடன் ஒருவனே தாங்கி நடத்தி வந்தான். இதைக் குறிப்பிடுவதற்கே கடையெழு வள்ளல்களின் வரலாற்றுக் குறிப்பை வரிசைப்படுத்திக் கூறினார் இந்நூலாசிரியர். இந்த வள்ளல்கள் அனைவரும் பெரு நிலத்தலைவர்கள். குறுநில மன்னர்கள், அல்லது சிற்றரசர்கள் என்று அழைக்கப்பட்டோர் அனைவரும் பெருநிலத் தலைவர்கள். அவர்கள் தாம் வளமுடையோராகவும், வள்ளல்களாகவும் வாழ்ந்து வந்தனர். வறுமை தமிழ்நாட்டிலே வள்ளல்களும், நல்லியக்கோடன் போன்ற கொடையாளிகளும் வாழ்ந்த காலத்திலும் தமிழ் மக்கள் பலர் வறுமையால் வாடினர். உண்ணற்கு உணவின்றிப் பட்டினியால் பரிதவித்தனர். தழைகளையும் கீரைகளையும் வேகவைத்து உண்டு பசி வேதனையைத் தணித்துக்கொண்டனர். இந்த நிலையை அப்படியே சித்திரித்துக் காட்டுகிறார் இந்நூலாசிரியர். "பசியினால் வருந்தி வாடுகின்றவள் மெல்லிய இடையை உடையவள்; வளையலை அணிந்தவள்; கிணைவாசிப்போன் மனைவி; அவள் வீட்டிலே உணவை ஆக்குவதற்கு ஒரு பண்டமும் இல்லை; குப்பையிலே பயிரான வேளைக் கீரையைக் கூர்மையான நகத்தினால் கிள்ளியெடுத்தாள்; உப்பில்லாமல் வேகவைத்தாள்; அறியாதவர்கள் அதைப் பார்த்தால் பரிகசிப்பார்களே என்று நாணமடைந்தாள்; ஆதலால் வாயிற் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டாள்; உள்ளே நிறைந்த |