| 78 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
"எயிற்றியரால் சமைக்கப்பட்ட இனிய புளிக்கறியையும், விரும்பத்தக்க சோற்றையும் ஆமானுடைய சூட்டிறைச்சியையும், மாந்தளிர் போன்ற மேனியை உடைய -வளையலையணிந்த-உமது பெண்களும் நீங்களும் பெறுவீர்கள். எயிற்றியர் அட்ட இன்புளி, வெஞ்சோறு தேமாமேனிச் சில்வளை ஆயமொடு ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்". (175--77) உழவர்குலப் பெண்கள் கைக்குத்தல் அரிசியால் சோறாக்குவார்கள்; வயல்களிலே பிடித்த நண்டையும் கொல்லையிலே காய்த்த பீர்க்கங் காயையும் சேர்த்துச் சமைப்பார்கள்; தாமும் உண்பர்; விருந்தினருக்கும் இடுவர். "வைரம் பாய்ந்த உலக்கையின் இரும்புப் பூணால் குற்றியெடுத்த சிறந்த வெண்மையான சோறு; கிளைத்த கால்களையுடைய நண்டோடு பீர்க்கங் காயையும் சேர்த்துச் சமைத்த கறி; இவைகளைப் பெற்று உண்பீர்கள். இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்". இவைகளால் வலைஞர், வேடர், உழவர் ஆகியோர் உண்ணும் உணவு வகைகளைக் காணலாம். (193--195) நல்லியக்கோடன் பெருமை இவன் தன்னைப் புகழ்ந்து பாடும் பொருநர்க்கும் புலவர்க்கும், அருமறை பயின்ற அந்தணர்களுக்கும் எப்பொழுதும் காட்சி தருவான். அவர்கள் வேண்டுவனவற்றை விருப்புடன் கொடுப்பான். இமயம் போன்ற அவனுடைய உயர்ந்த மாளிகையின் கதவு இவர்களுக்காக எப்பொழுதும் திறந்தேயிருக்கும். இதனை |