பொருநர்க்காயினும் புலவர்க்காயினும் அருமறை நாவின் அந்தணர்க்காயினும் கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன அடையா வாயிலவன் என்ற அடிகளால் அறியலாம். (203--206) இவன் அறிஞர்களைக் கண்டபோது அன்புடன் கைகுவித்து வணங்குவான். இதனை "முதுவோர்க்கு முகிழ்த்த கையினை" (231) அறிஞர்க்குக் குவித்த கையினையுடையவனாய்க் காட்சி தருவாய்!" என்பதனால் காணலாம். இவன் உழவர்க்கு ஒரு துன்பமும் உண்டாகாமல் காத்துவந்தான். அவர்கள் வறுமையால் வாடாமல் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால்தான் உணவுப் பொருள் உற்பத்தி குறையாது என்ற உண்மையை உணர்ந்திருந்தான். இதை "ஏரோர்க்கு நிழன்ற கோலினை" (233) உழவர்க்கு நன்மையைச் செய்யும் செங்கோலை உடையவன் நீ" என்றதனால் அறியலாம். இன்னும் பல இந்தச் சிறுபாணாற்றுப்படையின் மூலம் இன்னும் பல உண்மைகள் நமக்குத் தெரிகின்றன. இந்நூலாசிரியர் காலத்தில் தமிழ்நாட்டில் சிவன் கோயில்கள் இருந்தன. சிவபெருமான் கல்லால மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி நால்வர்க்கு ஞானோபதேசம் செய்தார். இச்செய்தி தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. ஆய் என்னும் வள்ளலின் |