82 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
பாலைநில மக்கள், குறிஞ்சிநில மக்கள், முல்லைநில மக்கள், மருதநில மக்கள், நெய்தல்நில மக்கள் இவர்களுடைய தொழில்களைப்பற்றியும் உணவு வகைகளைப்பற்றியும் படம் பிடித்ததுபோல் பாடியுள்ளார். இவர் பாடியிருக்கும் செய்திகள் எல்லாம் அனுபவித்தறிந்த உண்மைகள். பாட்டின் தலைவன் இது தொண்டைமான் இளந்திரையன் மீது பாடப்பட்டது. இவன் தொண்டை நாட்டை ஆண்டவன். இவனது தலைநகரம் காஞ்சிபுரம். இவன் பெயரை இளந்திரையன் என்றும், திரையன் என்றும் வழங்குவர். திரை என்பது கடலுக்கு ஒரு பெயர். திரை அலை, திரையை உடையது திரை. திரையன் என்பது காரணப் பெயர். திரை வழியாக வந்தவன்; அல்லது திரைகடல் ஓடுவதிலே தேர்ச்சி பெற்றவன். இந்த இளந்திரையன் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக வாழ்ந்தான்; சிறந்த செந்தமிழ்ப் புலவனாகவும் விளங்கினான்; நற்றிணையில் இவனால் பாடப்பட்ட மூன்று பாடல்கள் உண்டு; புறநானூற்றிலும் ஒரு பாடல் உண்டு. இளந்திரையம் என்ற நூல் ஒன்றையும் அவன் இயற்றியதாகத் தெரிகின்றது. நூலின் அமைப்பு வறுமையால் வாடிய பாணன் ஒருவன் காஞ்சிக்குச் சென்றான். இளந்திரையனைப் புகழ்ந்து பாடினான். அவனிடம் பரிசில் பெற்றான்; வறுமை நீங்கினான். அவன் தனது ஊருக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியிலே, வறுமையால் வருந்தி வள்ளல்களைத் தேடிச் செல்லும் |