| 84 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
விளாமரத்தின் அடியிலே-அகழ்ந்திருக்கின்ற உரலிலே-அந்த நெல்லைச் சொரிவார்கள். சிறிய வயிரம் பாய்ந்த உலக்கையால் அதைக் குற்றிக் கொழித்தெடுப்பார்கள். ஆழமான கிணற்றிலே கொஞ்சமாக ஊறியிருக்கின்ற உவர் நீரை முகந்து-பழைய வெறும் பானையிலே ஊற்றி-அடுப்பிலே உலை வைப்பார்கள். குற்றியெடுத்த புல்லரிசியை உலையிலிட்டு-அடுப்பு அணையாதபடி எரித்துச் சமைத்துச் சோறாக்குவார்கள். அச்சோற்றை உப்புக் கண்டத்தின் துணைகொண்டு உண்பார்கள். வந்த விருந்தினர்க்கும் இவ்வுணவைக் கொடுத்து உபசரிப்பார்கள். நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர் பார்வையாத்த பறைதாள் விளவின் நீழல் முன்றில் நிலவுரல் பெய்து குறுங்காழ் உலக்கை ஓச்சி, நெடும் கிணற்று வல்லூற்று உவரி தோண்டித், தொல்லை முரவு வாய்க்குழிசி முரி அடுப்பேற்றி வாராது அட்டவாடூன் புழுக்கல் (94--100) இவ்வடிகளால் தனித்திருக்கும் வேடப் பெண்களின் உணவைக் காணலாம். புல்லரிசியும், உப்புக் கண்டமுமே அவர்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும் உணவு என்று அறியலாம். எயினர் உணவு விற்பிடித்து வேட்டையாடி வாழும் வேடர்களின் உணவு, ஏழை எயிற்றியர்களின் உணவைக் காட்டிலும் ஏற்றமுள்ளது. அவர்கள் உண்ணும் சோறு மேட்டு நிலத்திலே விளைந்த செந்நெற் சோறு. அது, களர் நிலத்திலே வளர்ந்திருக்கும் ஈச்சமரத்தின் விதையைப் போலக் கொழுத்துக் |