காணப்படும். அச்சோற்றை நாய்களால் பிடித்துக் கொண்டு வந்த உடும்புப் பொறியலுடன் ஒன்று சேர்த்து உண்பர். இவ்வுணவையே விருந்தினர்க்கும் வேண்டுமளவு கொடுப்பர். கொடுவில் எயினர் குறும்பில் சேப்பின் களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச்சொன்றி, ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால்யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர். (129--133) உழவர் உணவு தொண்டை மண்டலத்திலே நெல் விளைவு குறைவு. புன்செய்ப் பயிர்கள்தாம் மிகுதி. அங்குள்ள உழவர்கள் பெரும்பாலும் புன்செய்ப் பயிர் செய்பவர்கள். அவர்களுடைய உணவும் பெரும்பாலும் புன்செய்த் தானியங்களாகவே இருக்கும். வரகரிசிச் சோற்றை, புழுக்கிய அவரைப் பருப்புடன் கலந்து, பெருகிய சோற்றை அவ்வுழவர்கள் உண்டு வந்தனர். இதனையே விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர். நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி, புகர் இணர் வேங்கை வீகண்டன்ன அவரை வான் புழுக்கட்டிப் பயில்வுற்று, இன்சுவை மூரல் பெறுகுவிர் (192--196) ஏழை உழவர்களின் இயற்கையான உணவு இதுதான் என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன. வரகும் அவரையும் புன்செய்த் தானியங்கள். இந்த உழவர்கள் தாழ்ந்த வகுப்பினர்; வேளாளர்கள் அல்லர். |