பக்கம் எண் :

பெரும்பாணாற்றுப்படை87

தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி,
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்        (253--256)

என்பதனால் அறியலாம்.

பார்ப்பார் உணவு

பார்ப்பார் வீட்டிற்குச் சென்றால் கிடைக்கும் உணவு இன்னது என்று இவ்வாசிரியர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் அவர்கள் இனிமையான அறுசுவை உணவை ஆக்கி உண்டனர்; புலால் புசிக்கமாட்டார்கள். காய்கறி உணவுகளையே உண்டனர். இங்கே கூறப்படும் பார்ப்பார் தமிழ்நாட்டிலேயே பிறந்தவர்கள்; தமிழர் குடியிலே தோன்றியவர்கள்; தமிழர்களிலே கல்வியும், அறிவும் தனக்கென வாழாத் தன்மையும், மக்களுக்கு நல்வழிகாட்டும் மாண்பும் பெற்றவர்களே அந்தணர்கள் என்றும், பார்ப்பார்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். இத்தகைய பார்ப்பாரே இந்நூலாசிரியரால் குறிக்கப்பட்டவர்கள் என்று கொள்ளலாம்.

"பார்ப்பார் வாழ்கின்ற இடத்திற்குப் போனால் அருந்ததியைப் போன்ற கற்புடைய பார்ப்பனப் பெண்களால் சமைக்கப்பட்ட பாற்சோறு, பருப்புச்சோறு முதலியவற்றைப் பெறுவீர்கள். இராஜான்னம் என்று பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோறு கிடைக்கும். மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும் கறிவேப்பிலையும் கலந்து, பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியல் கிடைக்கும். நல்ல வடுமாங்காய் கிடைக்கும். இன்னும் தயிர்சாதம், மாங்காய்ச் சாதம், புளியஞ்சாதம் போன்ற பலவகையான சித்திரான்னங்களும்