| 88 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
கிடைக்கும்" என்று கூறியுள்ளார் இவ்வாசிரியர். இதனை மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின் பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறு மீன்புரையும் கற்பின், நறுநுதல் வளைக்கை மகடூஉ வயினறிந்து அட்ட சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதாநறுமோர் வெண்ணையின், மாதுளத்து உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து, கஞ்சகம் நறுமுறி அளைஇப் பைந்துணர் நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த தகைமாண் காடியின், வகைப்படப் பெறுகுவிர்; (301--310) இவ்வடிகளால் பார்ப்பார் உணவைக் காணலாம். அக்காலத்துப் பார்ப்பார் எல்லோருடனும் இனிது கூடிப் பழகினர். வகுப்பு வேற்றுமை பாராட்டவில்லை. தமது இல்லத்துக்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்று உணவிடும் உத்தமர்களாயிருந்தனர். வேளாளர் உணவு சொந்த நிலமுள்ள உழவர்களான வேளாளர்கள் வீட்டுக்குச் சென்றால் எப்படிப்பட்ட உணவு கிடைக்கும் என்பதை இவ்வாசிரியர் அழகுபடக் கூறியிருக்கின்றார். "இனிப்பான சுளைகள் நிறைந்த பெரிய பலாப்பழம் கிடைக்கும். நல்ல இன்சுவை இளநீர் கிடைக்கும். யானைக் கொம்புகளைப்போன்ற தோற்றமுடன் வளைந்து, குலையிலே பழுத்திருக்கும் வாழைக்கனிகள் கிடைக்கும். நல்ல பனைநுங்கு கிடைக்கும். இன்னும்பல இனிய பண்டங்களும் கிடைக்கும். சேப்பம் இலையுடன், முற்றிய நல்ல கிழங்குகளும் |