| 90 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
சிறு வீடுகளிலே இருந்தனர்; அவர்களுடைய வீடுகள் சிறு குடிசைகளாகவே இருந்தன. நடுத்தரமான மக்கள் பெரிய வீடுகளாய் இல்லாவிட்டாலும் நல்ல வசதியான வீடுகளிலே குடியிருந்தனர். இத்தகைய காட்சிகளை நம் கண்ணெதிரிலே தோன்றும்படி எழுதிக் காட்டுகிறார் இந்நூலாசிரியர். "மாடம் ஓங்கிய மணல்மலி மறுகின்’ (322) மாடிகள் வானை முட்டி ஓங்கியிருக்கின்ற மணல் நிறைந்த வீதி. "விண்பொர நிவந்த வேயா மாடத்து" (348) வானத்தோடு போர் செய்வதுபோல் உயர்ந்திருக்கின்ற-கூரையற்ற மேல் வீடுள்ள-மாளிகைகள். இவைகளால் அக்காலத்தில் உயர்ந்த மாடி வீடுகள் இருந்தனவென்பதை அறியலாம். "அழியாமல் பல காலம் நிலைத்திருக்கின்ற நெற்கூடு உயர்ந்திருக்கும் நல்ல வீடு. தச்சனால் செய்யப்பட்ட சிறுதேரை உருட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், விளையாட்டால் சோர்வடைந்தனர். அவர்கள் தங்கள் சோர்வு தீரச் செவிலித்தாயரைத் தழுவிக்கொண்டு பாலருந்தினர்; பாலருந்தினபடியே படுக்கையிலே தூங்குகின்றனர். இத்தகைய நல்ல வீடு". இவ்வாறு செல்வமுடையவர்களின் வீட்டைப்பற்றிக் கூறியிருக்கிறார். இதனை குமரிமூத்த கூடோங்கும் நல்இல் தச்சச்சிறாஅர் நச்சப் புனைந்த ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர் தளர்நடை வருத்தம் வீட, அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந்து, அமளித் துஞ்சும் அழகுடை நல்இல். (247--252) |