பக்கம் எண் :

பெரும்பாணாற்றுப்படை93

இக்காஞ்சியின் சிறப்பை இந்நூலாசிரியர் விளக்கியிருக்கின்றார். இந்நூலாசிரியர் காலத்திலேயே அது பெரிய நகரமாக இருந்தது; செல்வங்கொழிக்கும் சிறந்த நகரமாக இருந்தது.

காஞ்சி நகரத்தைச் சேர்ந்த திருவெஃகாவென்பது திருமால் திருப்பதி. இந்நூலாசிரியர் காலத்திலேயே அது சிறந்த திருமால் திருப்பதியாக இருந்தது.

"திருவெஃகாவிலே திருமால் பள்ளிகொண்ட கோலத்திலே இருக்கின்றார். காந்தள் மலர்கள் பூத்திருக்கின்ற மலையின் பக்கத்திலே ஆண்யானை ஒன்று படுத்திருப்பதுபோல் பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமால் அவ்விடத்திலே பள்ளி கொண்டிருக்கிறார்.

காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்குப்
பாம்பு அணைப்பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்               (342--343)

என்று திருமால் அங்கு அமர்ந்திருக்கும் நிலையைக் குறிப்பிடுகின்றது.

மேலும் அத்திருவெஃகா வின் இயற்கைச் சிறப்பையும், அங்குள்ள இறைவனைப் பணியவேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது இந்நூல்.

"சுவர்க்கம் எளிதில் அடையக்கூடியது அன்று; தவம் புரிந்தோர்தான் அதைப் பெறமுடியும். அந்தத் துறக்கத்தைப் போன்ற இன்பந்தரும் நீர்த்துறை அங்குண்டு. அத்துறையில் என்றும் வற்றாமல் புதுநீர் வந்து கொண்டே இருக்கும். அந்த நீரிலும், துறையிலும் மணமும் நிறமும் பொருந்திய மலர்கள் மிகுதியாகக் காணப்படும். இளவேனிற்காலத்தின் இன்பத்தை நுகர்வதற்காக அங்கே பலர் கூடியிருப்பார்கள். நீங்களும் அவர்களோடு அமர்ந்து இளைப்பாறுங்கள். பின்னர் அங்குள்ள சிறந்த வல்லமையுள்ள கடவுளாகிய