| 94 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
திருமாலை வாழ்த்தி வணங்குங்கள். சிறிது உங்களுடைய கரிய தண்டமைந்த இனிய இசையைத் தரும் யாழை வாசித்துவிட்டுச் செல்லுங்கள். பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும் பொய்யா மரபின் பூமலி பெருந்துறைச் செவ்வி கொள்பவரோடு அசைஇ, அவ்வயின் அரும்திறல் கடவுள் வாழ்த்திச், சிறிதுநும் கருங்கோட்டு இன்இயம் இயக்கினிர் கழிமின்" (388--392) இவ்வாறு திருவெஃகாவின் சிறப்பைக் குறிப்பிட்டது. பழமையான காஞ்சிநகரத்தைப்பற்றிப் பெரும்பாணாற்றுப்படை பாராட்டிக் கூறுகின்றது. தொண்டை நாட்டுத் தலைநகரத்தின் சிறப்பை இதனால் காணலாம். "காஞ்சி நகரத்திலே பல சோலைகள் இருக்கின்றன. அச்சோலைகளிலே குரங்குகள் பலவுண்டு. யானைப்பாகர்கள், யானைகளுக்கு நெய் கலந்த சோற்றுக்கவளத்தை வைக்கின்றனர். யானைகள் அவைகளைத் தங்கள் காலிலே போட்டு மிதிக்கின்றன. பாகர்கள் ஏமாந்திருக்கும் சமயம் பார்த்துக் குரங்குகள் அக்கவளங்களைக் கவர்ந்துகொண்டு சோலைக்குள் ஓடிவிடுகின்றன. காஞ்சி நகரத்தின் தெருக்களிலே எப்பொழுதும் தேர்கள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. அதனால் தெருக்கள் பள்ளமும் படுகுழியுமாகக் காணப்படுகின்றன போரிலே தோல்வியறியாத வலிமையுள்ளவர்கள்; பெரும் புகழையே தங்களுடைய குடும்பத்தின் அடிப்படையாகக் கொண்டவர்கள்; இத்தகைய வீரக் குடியினர் பலர் அந்நகரிலே வாழ்கின்றனர். இல்லோர்க்கு வழங்குவதும், சிறந்த கொள்கையும் உடையவர்கள். எப்பொழுதும் அறம் புரிந்துகொண்டே இருக்கின்றனர். |