பக்கம் எண் :

96பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

"அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன்                     (36--37)

அதர்மத்தை ஒழித்து தர்மத்தைச் செய்வதற்குத் துணைபுரிகின்றவன்; கூர்மையான வேற்படையை உடைய இளந்திரையன்.

"முறைவேண்டு நர்க்கும் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கருளி,
இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக்
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து;
உரும்புஇல் சுற்றமொடு இருந்தோன்.           (443--447)

நீதிமுறையை வேண்டி வந்தோர்க்கும், தங்கள் குறை தீர்த்தலை வேண்டி வந்தோர்க்கும் அவர்கள் வேண்டுகின்றவைகளை, வேண்டுகின்றபடியே கொடுப்பவன். நடுநிலையிலிருந்து உண்மையை உணரும் உயர்ந்த அறிவுடையவன். இல்லோர்க்கும் புலவர்க்கும் எப்பொழுதும் கொடையளி செய்பவன். சோர்வற்ற உள்ளமுடையவன். கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள்-அறிஞர்கள்-நண்பர்கள்-உறவினர்கள்-ஆகிய சுற்றத்தார்களை உடையவன்". இத்தகைய பண்புள்ளவன் இளந்திரையன்.

அத்தம் செல்வோர் அலறத்தாக்கிக்
கைப்பொருள் வௌவும் களவேர் வாழ்க்கைக்
கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்.
உருமும் உரறாது அரவும் தப்பா
காட்டுமாவும் உறுகண் செய்யா                    (38--43)

அந்த இளந்திரையனுடைய ஆட்சிக்குள்ளிருக்கும் அகன்ற காட்டிலே எவருக்கும் எத்தகைய அச்சமும் இல்லை. எவரும் எந்நேரத்திலும் எவ்வழியிலும் நடந்து செல்லலாம். வழிநடப்போரை மறித்து, அவர்கள் அலறும்படி அடித்து, அவர்களுடைய