பக்கம் எண் :

98பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

அரசர்கள் பாலாவி போன்ற மெல்லிய ஆடைகளை அணிந்தனர். பரிசிலர்க்கும் அத்தகைய ஆடைகளை அளித்தனர்.

முருகனைப் பற்றிய வரலாறு-கந்தபுராணம்-தமிழ்நாட்டிலே பரவியிருந்தது.

இமயத்தைப் பற்றியும், கங்கை நதியைப் பற்றியும் தமிழர்கள் பெருமையாக மதித்து வந்தனர்.

தமிழகத்திலே தச்சுத்தொழில், இரும்புத்தொழில், உழவுத்தொழில், நாடகம் இசைபோன்ற கலைகள் வளர்ந்திருக்கின்றன

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், உழவர், வலையர், வேடர், பாணர் போன்ற பல பிரிவுகள் தமிழ் மக்களுக்குள்ளே இருந்தன. இருப்பினும் அவர்கள் பிறப்பிலே உயர்வு தாழ்வுகள் பாராட்டிக் கொள்ளவேயில்லை.

உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற வேற்றுமை பண்டைத் தமிழகத்தில் இருந்தது.

இன்னும் இவைபோன்ற பல அரிய செய்திகளை இந்தப் பெரும்பாணாற்றுப்படையிலே காணலாம். தமிழர் நாகரிகத்தையும், வரலாற்றையும் காண இப்பாட்டு பெருந்துணை செய்யும். பத்துப்பாட்டுள் இது ஒரு சிறந்த பாட்டு.