கையெடுத்துக் கும்பிட்டான். தேனீயின் ஆன்மா அப்போது அந்த அறைக்கு வந்திருக்கும் என்று அவன் நம்பியிருப்பானோ? ஹனிமேன், தான் பெற்ற பிலிமைக் கமிஷனரிடம் கொடுத்தான். அவர் அதைத் துணைக்கமிஷனரிடம் கொடுத்தார். “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக இந்த பிலிமில் இருக்கிற விவரங்கள் இங்கே வரவேண்டும். இந்த பிலிமில் பெயர்ப்பட்டியல்கள் இருக்கின்றன. பட்டியலில் உள்ள அத்தனை பேரையும் இரவோடு இரவாகக் கைது செய்ய வேண்டும். அதனால் நம் அலுவலகம் இரவு முழுவதும் வேலை செய்ய வேண்டும். போதுமான காவல் படையும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.” கமிஷனர் ஆணையிட்டவுடனே, ‘யெஸ் சார்’ என்று வேகமாக பதிலும், அதைவிட வேகமானசல்யூட்டும் துணைக்கமிஷனரிடமிருந்து வழக்கமாக வரும். அப்போது இரண்டுமே வரவில்லை. 10 கமிஷனரின் கவலை ஒருவித தயக்கத்துக்குப் பிறகு, “சார் ! மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள் என்பதால் நம் அலுவலகம் விடியற்காலை ஐந்து மணியிலிருந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நேற்றிரவு நேரம் கழித்தே வீட்டுக்குப் போனார்கள். அதனால் சில மணி நேரம் பிரேக் கொடுக்கலாம் சார்” என்றார், துணைக் கமிஷனர். |