பக்கம் எண் :

 109

“அதனால் என்ன? நாம் பத்து மணிக்குக் கமிஷனர் அலுவலகம் போனால் போதும். மேஜைமேல் காப்பி வைத்திருக்கிறேன். சூடு ஆறியிருக்காது. முதலில் காப்பியைக்குடி. பிறகு குளிக்கப் போகலாம்.”

சேரன் மேஜைமேல் இருந்த காப்பிக் கோப்பையை எடுத்துக் கொண்டான். ஹனிமேனுக்கு அருகே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். காப்பிக் கோப்பையைத் தன் உதட்டில் பொருத்தப் போனவன், அதை விலக்கி, “மைக்ரோ ஃபிலிம் பழுதடையவில்லையே? அது பயன்பட்டதா? அதில் குறிப்பிட்ட அனைவரையும் கைது செய்து விட்டனரா?” என்று கேட்டான்.

விடிந்ததும் விடியாததுமாக ஹனிமேன் கமிஷனருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்திகளை அறிந்திருந்தான். அதனால், “சேரா ! ஃபிலிம் பழுதாகவில்லை. மிகவும் பயன்பட்டது. பெயர்ப்பட்டியலில் உள்ளவரில் ஒருவனைத் தவிர மற்ற அனைவரையும் கைது செய்து விட்டதாகக் கமிஷனர் தெரிவித்தார். நாம் அவரைச் சந்திக்கச் செல்லும்போது அந்த ஒருவனும் கைதாகியிருப்பான். நீ கவலைப்படாமல் காப்பியைக் குடி” என்றான்.

சேரன் காப்பியைக் குடிக்க முயன்றபோது காலண்டர் கண்ணில் பட்டது. அது நவம்பர், 14 என்பதைப் பெரிய எழுத்துக்களில் காட்டியது. உடனே அவன் முகம் குவிந்ததை ஹனிமேன் கவனித்தான்.

நவம்பர் 14.

பாரதத்தின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள். சின்னஞ்சிறுவரிடம் பேரன்பு கொண்ட நேரு மாமா, தம் பிறந்த நாளை, குழந்தைகள் நாளாகக் கொண்டாடக் கோரினார். இந்தியா முழுவதும் அந்த நாள் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளின்