பக்கம் எண் :

116 

துணைக் கமிஷனர் கூறியவுடனே, ஹனிமேன், “மிஸ்டர் துணைக் கமிஷனர்! ம... ம... என்பதை மத்திய மந்திரி என்று இரண்டு சொற்களாகக் கொண்டீர்கள். கு... கு... என்பதில் ஒரு கு, குழந்தைகள் நாள் எனக் கொள்ளலாம். மற்றொரு கு என்ன?” என்று கேட்டான்.

“தெரியவில்லை” என்றார் துணைக் கமிஷனர்.

சேரன் திடீரென்று ஒரு கேள்வி கேட்டான்.

“குழந்தைகள் நாள் கொண்டாடும் அமைப்பில் குழந்தை எழுத்தாளர் சங்கம் இருக்குமே! அது ஆண்டு தோறும் குழந்தைகள் நாள் கொண்டாடும். கமிஷனர் ஸார் ! குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தைகள் நாள் கொண்டாடுகிறதா?”

சேரன் சிறுவர் பத்திரிகைகளைத் தொடர்ந்து படிப்பவன். அதனால், அவன் இவ்வாறு கேட்டான்.

“குழந்தை எழுத்தாளர் சங்கம்... ” என்று கூறிய துணைக் கமிஷனர் சுவரில் இருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தார். அதில் அன்று நகரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், காலமுறைப்படி இருந்தன. “அஸோஸியேஷன் ஆஃப் ரைட்டர்ஸ் ஃபார் சில்ட்ரன்... ” என்று படித்தார்.

“ஆமாம் சார். அதுதான் குழந்தை எழுத்தாளர் சங்கம். அங்கே மத்திய மந்திரி கலந்துகொள்கிறாரா?” - சேரன் கேட்டான்.

“ஆமாம்.”

“அப்படியானால் கு... கு... ம... ம... என்பது குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் நடக்கும் குழந்தைகள் நாள் விழாவில் கலந்து கொள்ளும் மத்திய மந்திரியைக் குறிக்கலாம்” என்றான் சேரன். “தேங்க்யூ சேரன் ! சங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் கவனிக்கத்