பக்கம் எண் :

 117

தவறி விட்டோம் !” இப்போதே குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் கலந்து கொள்ளும் மத்திய மந்திரிக்குப் போதுமான பாதுகாப்புத் தருகிறோம்” என்றார், கமிஷனர்.

அப்போது, “சார் ! இட் இஸ் வெரி லேட் ! இந்தச் சங்கத்தின் நிகழ்ச்சி காலை பதினொரு மணிக்குத் தொடங்குகிறது. இப்போது நேரம், பத்து ஐம்பது” என்றார் கமிஷனர்.

“உடனே கவர்னர் மாளிகைக்குப் போன் செய் ! அந்த மத்திய மந்திரி அங்கிருந்து புறப்பட வேண்டாம் என்றும் சொல் ! கொலைத் திட்டம் என்பதையும் சொல் !”

கமிஷனர் ஆணையிட்டவுடனே துணைக் கமிஷனர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மத்திய மந்திரியுடன் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து “வாட் ! மத்திய மந்திரி குழந்தை எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுப் போய்விட்டாரா? ஓ. . காட் !” என்று கூறினார்.

11
வெல்வது யார்?

துணைக் கமிஷனர் தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டுச் சோகத்தோடு கமிஷனரைப் பார்த்தார்.