பக்கம் எண் :

118 

“பதினோரு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றால் சாதாரணமாக மந்திரிகள் அரை மணி, முக்கால் மணி நேரம் தாமதமாகப் புறப்படுவார்கள். இவர் காலம் தவறாத அமைச்சராக இருக்கிறாரே !” என்று கூறிய கமிஷனர் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு, “மிஸ்டர் துணைக்கமிஷனர் ! வயர்லஸ் மூலம், காவல் துறையினருடன் தொடர்பு கொள்ளுங்கள். மத்திய மந்திரியின் காருக்கு முன்னே நம் துறையினர் பாதுகாவலுக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களிடம், கொலை நடக்கலாம் என்று செய்தி வந்திருப்பதை அறிவியுங்கள். அவர்கள் அதை அமைச்சரிடம் தெரிவித்து, அவரைக் குழந்தை எழுத்தாளர்சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பிப் போகுமாறு வற்புறுத்தச் சொல்லுங்கள். அமைச்சர் போகும் வழியில் அவர் காரை வழி மறித்தும் சொல்லலாம் என்றும் தெரிவியுங்கள். வயர்லஸ் மூலம் தொடர்புகொள்ள முடிந்த அனைவரிடமும் தெரிவியுங்கள். க்விக் ! நாம் விதியோடு போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காலதாமதம் சாலவும் தீது” என்று கூறினார். அவர் எழுத்தாளர் என்பதும் பேச்சில் வெளிப்பட்டது.

துணைக் கமிஷனர் அறைக்கு வெளியே ஓடினார். அறையிலிருந்த மூவரும் மயான அமைதியில் ஆழ்ந்தனர். மயான அமைதியில்... என்பது அமங்கலச் சொற்றொடரோ?

துணைக் கமிஷனரின் வயர்லஸ் செய்தி காவல் துறையினரை அடைந்தபோது, மத்திய மந்திரியின் கார் மேம்பாலத்தைக் கடந்து, வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளில், காருக்கு முன்னே சென்ற காவல் அதிகாரி ஒருவர் செய்தியைக் கேட்டு அடைந்த அதிர்ச்சியில், அவரது வண்டி திசை தவறிச் சாலையில் குறுக்கே பாய்ந்தது. ஒரு கணத்தில் அதை