உணர்ந்து வண்டியைச் சாலையின் மறு ஓரத்துக்குச் செலுத்தினார். அமைச்சரின் கார், வேகத்தைக் குறைக்காமல் விர்ரென்று சென்றது. அதிகாரி தனது முட்டாள் தனத்தை நொந்து கொண்டார். சாலையின் குறுக்கே சென்ற மோட்டார் சைக்கிளை அப்படியே அங்கேயே நிறுத்தியிருந்தால், இந்நேரம் அமைச்சரின் கார் நின்றிருக்கும். சொல்ல வேண்டியதைச் சொல்லி, அமைச்சரைத் திருப்பி அனுப்பியிருக்கலாமே! அதிகாரி சாலையைப் பார்த்தார். அமைச்சரின் கார் ஆனந்த் தியேட்டரை நெருங்கிக் கொண்டிருந்தது. உடனே தனது மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து, வேகமாகச் செலுத்தினார். அது மின்னலைப் போலப் பாய்ந்து அமைச்சரின் காரை விரட்டியது. குழந்தை எழுத்தாளர் சங்கக் கூட்டம் மத்திய நூலகக் கட்டடத்தில் நடைபெறுகிறது. அதன் வெளி வாயிலில் அமைச்சரின் கார் மெதுவாகத் திரும்பி நுழையும்போதே, போலீஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிள் அவர் காரைக் கடந்து முன்னே போய், அமைச்சரை வரவேற்கக் காத்து நின்ற சங்கப் பிரமுகர்களின் எதிரே நின்றது. “இனி அமைச்சரைக் கட்டடத்துக்குள் செல்லாமல் தடுத்துவிடலாம்” என்ற நம்பிக்கையுடன், அதிகாரி மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கினார். **** துணைக் கமிஷனர் சுமார் பதினைந்து நிமிடத்தில் சோர்ந்த நடையும் தொங்கிய முகமுகமாகத் திரும்பி வந்தார். “சாரி சார் ! நமது முயற்சி முழுப்பலனைத் தரவில்லை” என்றார். “விளக்கமாய்ச் சொல்லுங்கள்” கமிஷனர் கேட்டார். |