“சார் ! என்னுடைய வயர்லஸ் செய்தியைப் பெற்ற அதிகாரி ஒருவர், அமைச்சரை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் நுழையும்முன் சந்தித்துத் தடுத்தார். ஆனால் அதிகாரி கூறிய காரணத்தைக் கேட்டு அந்த அமைச்சர் சிரித்தாராம். “என்னைக் கொலை செய்வதாகச் செய்தி வந்திருக்கிறதா? இதுபோல் எத்தனை செய்திகள் கேட்டிருக்கிறேன்! என் வீட்டுக்குள்ளேயே வெடிகுண்டு இருப்பதாய் மூன்று மாதங்களுக்கு முன் செய்தி வந்தது. வீட்டை விட்டு ஓட்டலுக்குப் போகச் சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். அரசியலில் புகுந்துவிட்டால் இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சக்கூடாது. நான் அஞ்ச மாட்டேன். நீர் போலீஸ்காரர். கொலை செய்பவனைப் பிடிக்கப் பாரும் ! என்னைத் தடுக்கப் பார்க்காதீர் !” என்று கூறி, அதிகாரியைத் தம் கையாலேயே ஒதுக்கித் தள்ளிவிட்டு, கட்டடத்துக்குள் போய் விட்டாராம். செய்தி வந்தது.” துணைக் கமிஷனர் சொன்னதும், “இந்த அமைச்சருக்கு திருக்குறளின் இந்தி மொழிபெயர்ப்பு வாங்கி, அதில் அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்னும் குறளைச் சிவப்பு மையால் கோடிட்டு அனுப்ப வேண்டும்” என்றார் கமிஷனர். “அனுப்பலாம் சார். இன்று அவர் கொலையாகாமல் தப்பினால்” என்றார் துணைக் கமிஷனர். கமிஷனர் தமிழ் இலக்கியம் கற்றவர். ‘ஊழிற் பெருவலியாவுள’ என்னும் வள்ளுவர் வாக்கு அவர் மனத்தில் பளிச்சிட்டது. அவருடைய முயற்சிகளை அமைச்சரின் விதி வென்றுவருகிறதா? திடீரென்று, ‘விதியே, இன்று உன்னை விடப்போவதில்லை ! வெல்லுவது யார்? நானா, நீயா? பார்த்து விடலாம் !’ என்று உரக்கக் கூறிக்கொண்டே எழுந்தார். நாம் அமைச்சரின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு இப்போதே செல்வோம். இங்கு இருக்கும் போலீஸ்காரர் |