பக்கம் எண் :

12 

கொள்கையும் கலையும் ! அப்புறம் அதைப் பற்றிச் சிந்திக்கவும் மாட்டார்கள். பெரியவர்கள் நிலையே இப்படி ! விஜய் சிறுவன்தானே! அவனும் உணர்ச்சிவசப்பட்டு மேற்கொண்ட கொள்கையை ஒரு வாரத்தில் மறந்து விட்டான் ; ஏன், துறந்துவிட்டான் என்றும் சொல்லலாம்.

அதன் பிறகுதான் சேரன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான். தினசரி அவனுடைய சொல்லம்புகளால் தாக்கப்பட்டுத் தவித்துப் போனவன் அவன்தானே! விஜய் பழைய விஜயாகி, டேபிள் டென்னிஸ், படிப்பு, வீடியோ என்று திரும்பிய பிறகு சேரன் முன்போலவே அவனுடன் கலகலப்போடு பேசி, விளையாடிக் களிப்புக் கொண்டான்.

ஒரு மாதம் ஓடியது.

அன்று திங்கட்கிழமை. தேதி, நவம்பர் ஆறு. மாலை நேரம்.

சேரன் விஜய் வீட்டுக்குப் போனான். விஜய் அம்மாவுடன் வெளியே போயிருப்பதாகக் காவல்காரன் கூறினான். ‘திரும்பிப் போகலாமா? விஜய் வரும் வரை காத்திருக்கலாமா?’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ‘லொள், லொள்’ என்று குரைத்துக் கொண்டுஓடிவந்த ஒரு நாய் அவன் மீது தாவியது. சேரனின் உடலை யாரோ மலர்ச் செண்டால் வருடியது போல உணர்ந்தான். அந்த நாயைத் தழுவிக் கொண்டான்.

அது விஜய் வளர்க்கும் காக்கர்ஸ் ஸ்பானியல் என்னும் உயர் ரகநாய். வெள்ளையும் கறுப்பும் கலந்த அந்த நாய் பார்ப்பவரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். உடல் முழுவதும் சடை சடையாய் முடி. காதுகள் இரண்டும் நீண்டு கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. காதுகளிலும் அடர்த்தியான-நீளமான முடி. நாய் கொஞ்சம்