பக்கம் எண் :

 13

குனிந்தாலும் காதுகள் தரையைப் பெருக்கும். அதற்கு ஒரு வயது. அதுபத்து நாள் குட்டியாய் இருந்த போது, சென்னையிலிருந்து, அதை வாங்கி வந்து விஜய்க்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார், அவன் தந்தை. விலை இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்!

“இவ்வளவு விலையா?” என்று கேட்டான் சேரன்.

“பின்னே! இதன் தந்தை சிறந்த நாய் என்று சாம்பியன் பட்டம் பெற்றது ; தாயும் ஒரு சாம்பியன்! அதனால் இவ்வளவு விலை. கோயமுத்தூரில் காக்கர்ஸ் ஸ்பானியல் மிகக்குறைவு தெரியுமா?”

விஜய் பெருமையோடு சொன்னதை வியப்போடு கேட்ட சேரன், அன்றே அதனிடம் அன்பு செலுத்தினான்.

காக்கர்ஸ் ஸ்பானியலுக்கு விஜய் வைத்த பெயர் டாலர் ! பைசாவும் ரூபாயும் வைத்திருப்பவர்களால் வளர்க்க முடியாத நாய்க்கு டாலர் என்பது பொருத்தமான பெயர்தானே ! சேரனுக்கு டாலரைப் பிடித்தது போலவே டாலருக்கும் சேரனைப் பிடிக்கும். அதனால்தான் அன்றும் அவன் மீதுதாவிப் பாய்ந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது.

சேரன் டாலரைக் கொஞ்சினான் ; சில நிமிடங்களில் விஜய் வந்து விட்டான்.

சேரனும், விஜயும் பங்களாவின், முன்னே இருந்த புல்வெளியில், நாற்காலியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சேரன் மடியில் டாலர் வீற்றிருந்தது.

“சேரா! டாலர் என்னிடம் எப்போது வந்தது என்று நினைவிருக்கிறதா?”