“ஓ! சென்ற ஆண்டு உன் பிறந்த நாளின்போது! சரியாகச் சொன்னால் நவம்பர் பதினொன்றாம் தேதி!” “இன்றைக்குத் தேதி என்ன?” “நவம்பர் மூன்று விஜய்! இன்னும் ஐந்து நாளில் உனக்கு பர்த்டே வருகிறது! என் அட்வான்ஸ் வாழ்த்தை ஏற்றுக் கொள். ஹாப்பி பர்த் டே டு யூ!” “நன்றி! ஆனாலும் வழக்கம்போல் என் பிறந்த நாள் விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டும்.” “நிச்சயமாக விஜய்! உன் பிறந்த நாளுக்கு வருவேன்! பிரியம் நிறைந்த வாழ்த்தையும் தருவேன் !” என்று நாடக வசனம் போல் பேசினான், சேரன். “சேரா ! சொன்னதை மறக்கக் கூடாது. இந்த முறை எனது பிறந்த நாள் விழாவை ஊட்டியில் கொண்டாட அப்பா ஏற்பாடு செய்திருக்கிறார். அதனால் நீ எட்டாந் தேதி மாலையே என்னுடன் ஊட்டிக்கு வருகிறாய்...” “ஊட்டிக்கா... !” “ஆமாம். சாக்குப் போக்குச் சொல்லக் கூடாது. வேண்டுமானால் நானே உன் அம்மாவிடம் அனுமதி கேட்கிறேன்” என்றான் விஜய். அதற்குத் தேவை ஏற்படவில்லை. விஜய்குமாருடன் உதகைக்கு அல்ல, இமயத்துக்கே போவதானாலும் சேரனின் பெற்றோர் அனுமதிப்பார்கள் ; அனுமதித்தார்கள். நவம்பர் 10, சனிக்கிழமை இரவு ! உதகமண்டலத்தில், அரசினர் பூங்காவை ஒட்டிய பகுதியில் கம்பீரமாக உயர்ந்திருந்த பங்களாவில் குளிருக்கு |