இதமான கம்பளிக்குள்ளே விஜய்குமார் கண்ணுறங்கினான். அதே அறையில் ஒரு தனிக் கட்டிலில், அதே மாதிரி கம்பளிக்குள்ளே உடலைக் குறுக்கி உறங்கினான்,சேரன். நவம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை ! பகல் பத்து மணிக்கு விஜய்குமாரின் பிறந்த நாள் விழா நடந்தது. விஜய், மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்க, ‘ஹாப்பி பர்த் டே டு யூ’ பாடல் ஒலிக்க, வெகு கோலாகலத்துடன் விழா நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் பெரும்பாலோர் விஜயின் தந்தைக்கு நண்பர்கள். விஜய்குமாரின் தந்தை வெங்கடேசன் கோவையில் உள்ள பெரும் பணக்காரர்கள் சிலரில் ஒருவர். அவர் தமது தொழில் வளர்ச்சிக்காக ஏதேதோ காரணங்களைச் சொல்லி விழா நடத்துவார். இம்முறை ஊட்டிக்கு வந்திருக்கும் பெரிய புள்ளிகள் சிலரை வளைத்துப்பிடிக்க மகனின் பிறந்த நாள் விழாவை ஊட்டியில் வைத்துக் கொண்டார். சேரன், தன் நண்பனுக்கு டாக்டர் மு. வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரையைப் பரிசளித்தான். அது ஒன்று தான் புத்தகப் பரிசு. மற்றவை. பொருள்கள் ! வண்ணத்தாள்களில் சுற்றப்பட்டு, வழுவழுப்பான டேப்புகளால் கட்டப்பட்ட பொருள்கள் ! விழாவுக்குப் பின்னே பகல் விருந்து மிகச் சிறப்பாக இருந்தது. விலாப்புடைக்க விருந்துண்ட சேரன், சற்று நேரம் கண் அயரலாம் என்று படுத்தான். ஆழ்ந்த உறக்கம் அவனை ஆட்கொண்டது. சேரன் விழித்து எழுந்த போது, அந்த மாளிகை அமைதியாக இருந்தது. மணி பார்த்தான். நான்கு |