திருந்த சங்கத்துப் பிரமுகர்கள் இரண்டு பேர் எழுந்து இடம் கொடுக்க, அங்கே ஹனிமேன் உட்கார்ந்தான். அருகே சேரன் உட்கார்ந்தான். அவன் மடியில் டாலர் உட்கார்ந்தது. கமிஷனர் உட்காராமல் ஓரமாக ஒதுங்கி நின்றார். பின்னே காவல்துறையின் சி. ஐ. டிக்கள் நால்வர் சாதாரண உடையில் மெதுவாக நடந்து வந்தார்கள். கமிஷனர் தலை அசைத்தார். ஒருவர் மேடைக்குப் பின்புறம் சென்றார். இன்னொருவர் மேடையிலிருந்த சங்கச் செயலாளரை அழைத்து முதல் இரண்டு வரிசைகளில் வீற்றிருப்பவரைப் பற்றி விசாரித்தார். மற்றொருவர் வடக்குப் பகுதியின் ஓரத்தில் நின்றிருந்த புகைப்படக்காரர் களை அணுகினார். நான்காமவர், கூட்டத்தின் நடுவே புகுந்தார். துணைக் கமிஷனர் மெல்ல நடந்து உள்ளே வந்தார். ஆனால் கடைசி வரிசையின் பின்னே நின்றார். அப்புறம் வந்த போலீஸ்காரர்கள், லிப்ட் வழியில், மாடிப்படியில், அரங்க வழியில், அரங்கத்தின் உள்ளே என்று ஆங்காங்கே பிரிந்து நின்றனர். அரங்கத்தில் பெருங்கூட்டம் என்று சொல்ல முடியாது. கடைசி வரிசை வரை ஆட்கள் இருந்தார்கள் என்றாலும் பல வரிசைகளில் சில நாற்காலிகள் காலியாய் இருந்தன. காலை நேரத்தில் நடக்கும் ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்கு, இது பெருங்கூட்டமாகக் கருதத்தக்கது. இறை வணக்கம் முடிந்து, வரவேற்புரை முடிந்து, தலைமை உரை நடந்து கொண்டிருந்தது. சங்கத்தின் தலைவர் சிரித்த முகத்தோடு தம் தலைமை உரையில் குழந்தை எழுத்தாளர் சங்கத்தைப் பற்றிய சில விவரங்களைக் கூறினார். ‘தமிழ்நாட்டில் முப்பத்தைந்து ஆண்டுகளாக இடையறாமல் செயல்பட்டு வரும் ஒரே எழுத்தாளர் |